Offline
Menu
மதுராந்தகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
By Administrator
Published on 09/26/2026 17:00
News

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று மதுராந்தகத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய சொந்தங்களே! உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் இன்று முதல்-அமைச்சராக வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறோம். எப்போதும் போல உங்கள் வீட்டு பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக வந்திருக்கிறேன்.

 

உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? ஒரு தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, பெண்கள், இளைஞர்கள், குடும்பங்கள் பேராதரவோடு, ஊழல், லஞ்சத்தை ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? ஏன் தீயசக்தி திமுக தினந்தோறும் தவெக குறித்து அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசி வருகிறது?

 

நான் சினிமாவில் ஜெயிச்சதுக்கும், இன்று அரசியலில் ஜெயிச்சதுக்கும் தமிழ்நாட்டு உறவுகள் தான் காரணம். அந்த உறவுகளால் தான் கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்குள் 35 சதவீத வாக்குகள் பெற்று ஜெயிக்க முடிந்தது. ஜெயலலிதாவை, மு.க.ஸ்டாலின் ஆபாசமாக பேசிய வீடியோ இப்போது வரை வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, திமுகவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் பெண்களை ஆபாசமாகத்தான் பேசுகிறார்கள்.

 

ஜெயலலிதாவை தவறாக பேசிய திமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி செய்தபோதே அவர்களது முகமூடி கிழிந்துவிட்டது. முகமூடி கிழிந்தது தெரியாமல் அதிமுக கூவிக் கொண்டிருக்கிறது. மதுராந்தகம் தொகுதி மக்களே இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பாக உங்கள் சகோதரி, நம்ம வீட்டுப் பெண், என் தங்கச்சி மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.

 

விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுவது பெண்களை ஆபாசமாக பேசும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். திமுகவுக்கும், மற்றும் பலருக்கும் ஓட்டு போட்டால் பெண்களை தவறாக பேசுபவர்களை ஆதரிப்பதாகவிடும். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்று அண்ணா கூறினார். 108 சீட்டு வாங்கிய நாம் ஆட்சி அமைப்பது நடந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவும், மற்றும் பலரும் சேர்ந்து முயற்சி செய்தார்கள்.

Comments