Offline
Menu
மலாக்காவில் போலி குடி நுழைவு அதிகாரி கைது
By Administrator
Published on 10/02/2026 16:00
News
பெண் செய்த விபரீத மோசடி அம்பலம்

மலாக்கா:

குடி நுழைவு இலாகா தலைமையகத்தின் மூத்த இயக்குனர் மற்றும் அதன் ஒருமைப்பாட்டுத் துறை தலைவர் எனப் பொய் கூறி வெளிநாட்டினருக்குப் பணி அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தலா RM6,000 கட்டணம் வசூலித்து வந்த 5 பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

உள்துறை அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, தாமான் மாலிம் ஜெயா மற்றும் தாமான் கோத்தா லக்சாமனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வாடிக்கையாளருடன் இருந்தபோது கைது செய்யப்பட்ட அப்பெண் எப்போதுமே குடி நுழைவு இலாக்காவில் பணிபுரிந்ததில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சோதனையின் போது, உயர் அதிகாரிகளின் சீருடைகள், போலியான அடையாள அட்டை, பெயர் முத்திரை, கமிஷன் கடிதம் மற்றும் சமூக வலைதளப் படங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதோடு, தலைமறைவாகச் செயல்பட்டு வந்த அவர் மீது குடி நுழைவு சட்டம் 1959/63-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தால் 4 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments