ஈப்போ: தம்பூன், தாமான் பெர்பாதுவான் ரியா பகுதியில், ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) காலை 7.20 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகப் பணியாளர்கள் அறிவித்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத் தெரிவித்தார்.
அரை மயக்க நிலையில் இருந்த காயமடைந்த பெண்ணுக்கு, அவசர மருத்துவப் பணியாளர்கள் கழுத்துப் பட்டை அணிவித்து முதலுதவி அளித்து, பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.