Offline
Menu
கத்திக்குத்து வழக்கில் கைதான மூவருக்கு தலா RM12,000 ஜாமீன் அனுமதி
By Administrator
Published on 10/03/2026 16:00
News
பினாங்கு நீதிமன்றத்தில் பரபரப்பு

பினாங்கு, ஜார்ஜ் டவுனில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் SJKC Kong Ming கிளை 2 பள்ளிக்கு அருகில் பாராங் கத்தியைப் பயன்படுத்தி 2 நபர்களுக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 3 நண்பர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

கே. அருள் கெவின் ராஜ் (20), பி.குஹன் (22) மற்றும் வி. விஷ்ணு (24) ஆகிய மூவரும் நீதிபதிகள் ஸுராய்டா அப்பாஸ் மற்றும் இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நடைபெற்ற தனித்தனி அமர்வுகளில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

 

குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில், ஈ-ஹெய்லிங் ஓட்டுநரான அருளின் மாத வருமானம் RM1,000 எனவும், electrician மற்றும் லாரி ஓட்டுநரான மற்ற இருவரின் வருமானம் தலா RM1,500 எனவும் வழக்கறிஞர் கே. மகேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, ஒவவொரு குற்றச்சாட்டுக்கும் தலா RM12,000 மற்றும் RM10,000 ஜாமீன் தொகையை நிர்ணயித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக்கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments