Offline
Menu
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி திரைப்பட இயக்குநர் திடீர் கைது
By Administrator
Published on 10/10/2026 13:00
News

வாஷிங்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் அரபாத் ஷேக்கை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) கைது செய்துள்ளது.

 

கைது

காஷ்மீரைச் சேர்ந்த 42 வயதான அரபாத் ஷேக், கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் விசாவில் திரைப்படம் தொடர்பான மேற்படிப்பைத் தொடர்வதற்காக அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், 2020-ம் ஆண்டு அமெரிக்காவில் அரசியல் புகலிடம் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.

 

அவரது குடிவரவு விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் தங்குவதற்கும் பணிபுரிவதற்கும் தேவையான ஆவணங்கள் அவரிடம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரபாத் ஷேக் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

தடுப்பு மையத்தில் அடைப்பு

கைது செய்யப்பட்ட அரபாத் ஷேக், தற்போது அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள கரோலின் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Comments