Offline
Menu
அக்.28க்குள் இந்தியாவை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
By Administrator
Published on 10/17/2026 15:00
News

மும்பை, அமெரிக்கக் குடியுரிமை கொண்ட நடிகர் இம்ரான் கானை, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாகக் கூறி, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக அக்.,10ம் தேதி கரப்பான்பூச்சி அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்த முயன்றனர் அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மும்பை கிராந்தி மைதானத்தில் நடக்கவிருந்த போராட்டத்தில் இந்தி நடிகர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அமர வைக்கப்பட்டிருந்த போட்டோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தநிலையில், நடிகர் இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேறுமறு கூறி, மும்பை போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால், இந்தியர் அல்லாதவராக கருதப்படுகிறார். குடியேற்றச் சட்டவிதிகளின் படி, வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்.,28ம் தேதிக்குள் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற மும்பை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Comments