Offline
Menu
மலேசியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துறை துரிதமான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது
By Administrator
Published on 10/23/2026 17:00
News

டிஜிட்டல்துறையில் மலேசியா துரிதமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது என்று டிஜிட்டல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்றுத் தெரிவித்தார். ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மலேசியாவின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு போவது என்பது கைப்பேசிகளுடன் நின்று விடக்கூடாது. நம்முடைய தொழிற்சாலைகள், வாகனங்கள், தரவு மையங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவான முறையில் பயன்படுத்த வேண்டிய காலகட்டம் இதுவாகும் என்று அவர் சொன்னார்.

 

இது டிஜிட்டல் தொழில்துறையாகும். முக்கியமான பணிகளை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செய்யக்கூடிய காலகட்டம் இதுவாகும். இப்படிப் பல்வேறு துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் விரிவடைந்து வருகின்ற சூழல் நம்முன்னே தோன்றி இருக்கிறது. மின்னியல், மின்சாரத் தொழில்களிலும் உயர்தொழில்நுட்பத் தயாரிப்புத்துறையிலும் தேசிய செமி கண்டக்டர் வியூகத்தை மலேசியா நிறைவேற்றி இருக்கிறது.

 

இதில் முன்னணி வகிக்கும் உலகின் 10 நாடுகளுள் மலேசியாவும் அடங்கும். பூச்சோங்கில் உள்ள ஐசி டிசைன் பார்க் இதற்கு முன்னோடியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் நம்முடைய தொழில்துறைகளுக்கும் உதவும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் நடுத்தர பயிற்சிகளையும் சரியான திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

அந்த வகையில் மலேசியாவில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த டசால்ட் சிஸ்டம் தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவை வரவேற்று நன்றி கூறுகிறேன் என்றும் அவர் சொன்னார். அதனுடைய அலுவலகத்தைத் திறந்து வைப்பதிலும் மகிழ்ச்சி அடைவதாக கோபிந்த் சிங் டியே கூறினார்.

Comments