Offline
Menu
ஆந்திர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
By Administrator
Published on 11/06/2026 12:00
News
தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி

அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் 13 மாநகராட்சிகள், 79 நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத் துகள் என மொத்தம் 92 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 1-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

 

இதில் ஆந்திராவில் ஆளும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 13 மாநக ராட்சிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

 

குறிப்பாக திருப்பதி, சித்தூர், குண்டூர், நெல்லூர், விசாகப்பட்டினம் ஆகிய முக்கிய மாநகராட்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த வெற்றியை ஆந் திரா முழுவதும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். முரசு புயல், மழை காரண மாக சில இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் நிலவியது குறிப்பிடத்தக் கது.

Comments