Offline
Menu
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண AI தொழில்நுட்பம்
By Administrator
Published on 11/06/2026 13:00
News
PH தேர்தல் வாக்குறுதி!

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் அன்றாடப் பயணங்களை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பக்காத்தான் ஹராப்பான் (PH) அறிவித்துள்ளது.

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் ஆறாவது நாளான இன்று, ‘அஸ்பிராசி மலாக்கா ரூமா கித்தா’ (Aspirasi Melaka Rumah Kita) திட்டத்தின் கீழ் இந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

குறிப்பாக, வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளிகளுக்குத் தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்காகச் சாலை உள்கட்டமைப்பு, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கும் பக்காத்தான் ஹராப்பான் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments