Offline
Menu
மலாக்காவின் 55 திட்டங்களுக்கு இன்னும் பதில் இல்லை!
By Administrator
Published on 11/06/2026 13:00
News
சிறந்த ஆட்சியைத் தேர்ந்தெடுங்கள்

மலாக்கா மாநிலத்தின் வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்ட 55 திட்டங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என Keadilan கட்சியின் மத்திய துணைச் செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்துள்ளார்.

 

மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இதுவரை உரிய விளக்கங்கள் வழங்கப்படாதது கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் மாநில நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்கள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதை மக்கள் கண்கூடாகக் காண முடிவதாக சிவமலர் கணபதி தெரிவித்தார்.

 

அந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நடவடிக்கைகள், நிர்வாக அணுகுமுறைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மலாக்கா மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது வெறும் அறிவிப்புகளிலும் வாக்குறுதிகளிலும் மட்டுமே இருக்கக்கூடாது. மாறாக, மக்களின் அன்றாட வாழ்க்கையில் உணரக்கூடிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதே முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Comments