Offline
சிம்பாங் பூலாய் கேமரன்மலை செல்லும் சாலையில் மீண்டும் மண்சரிவு
Published on 10/27/2024 00:08
News

ஈப்போ:

சிம்பாங் பூலாய் கேமரன்மலை செல்லும் சாலையில் 43.4 ஆவது கிலோ மீட்டரில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு மற்றும் சாலையின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, இச் சாலை நேற்று மாலை 5.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அபாங் ஜைனல் ஆபிடின் அபாங் அமாட் கூறினார்.

இச்சம்பவம் பேராக், பகாங் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது குறித்த் சாலையில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும், எனவே பொதுமக்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறும், பயணங்களை திட்டமிட்டு் மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

Comments