Offline
Menu
ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானங்கள் மோதல்- 3 பேர் பலி
Published on 10/28/2024 02:23
News

கான்பெரா:ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது மற்றொரு விமானம் மீது அந்த விமானம் மோதியது. இதனால் மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த இரு விமானங்களும் நொறுங்கி விழுந்தன. அப்போது அந்த விமானங்கள் தீப்பிடித்ததால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியது.

இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் விமானிகள் உள்பட 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Comments