Offline
சுற்றுலா சென்ற புதுமணத் தம்பதி.. கணவன் கண்முன்னேயே இளம்பெண் 8 பேரால் கூட்டு பலாத்காரம்
Published on 10/28/2024 02:28
News

சுற்றுலா சென்ற இடத்தில் கணவன் மரத்தில் கட்டப்பட்ட அவரின் கண் முன்னேயே இளம்பெண் 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ரேவா மாவட்டம் குர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பைரவ் பாபா கோவிலுக்குச் சென்றுள்ளனர். இருவருக்கும் 19 வயதுதான் இருக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருந்த அவர்களை குடிபோதையில் அங்கு வந்த எட்டுப்பேர் சூழ்ந்துள்ளனர். பெண்ணின் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரது கண் முன்னேயே 8 பேரும் அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அதை வீடியோ எடுத்த அவர்கள், நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்குப்பதிந்த போலீஸார் அந்த 8 போரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

ராம்கிஷான் கோரி, தீபக் கோரி, ராவிஷ் குப்தா, சுசில் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, லவ்குஷ் கோரி, ராஜ்நிஷ் கோரி ஆகிய 8 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் 19 முதல் 21 வயது தான் இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர்களில் 7 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. தப்பியோடிய ராஜ்நிஷ் கோரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comments