Offline
மகன் இறந்தது தெரியாமல் அவரது சடலத்துடன் 4 நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற தம்பதி
Published on 11/01/2024 13:42
News

பார்வையற்ற தம்பதியினர் தங்களது மகன் இறந்தது தெரியாமல் 4 நாட்கள் அவருடைய சடலத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கலுவா ரமணா அவரது மனைவி சாந்திகுமாரி ஆகியோர் தங்களுடைய இளைய மகன் பிரமோத்துடன் ஐதராபாத்தின் பிளைண்ட்ஸ் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த பார்வையற்ற தம்பதியினரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

4 நாட்களுக்கு முன்பு தூக்கத்திலேயே பிரமோத் இறந்துவிட்டதாக தெரிவித்த போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பார்வையற்ற தம்பதியின் மூத்த மகன் பிரதீப் என்பவருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். பின்னர் பிரதீப்பிடம் அவரது பெற்றோர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

30 வயதான பிரமோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். மேலும் அவரது 2 மகள்களையும் அவரது மனைவி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரமோத் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Comments