Offline
Menu
சுங்கை பூலோவிலுள்ள டயர், பேட்டரிகள் சேமிப்பு கிடங்கில் தீ
Published on 11/01/2024 13:48
News

கோலாலம்பூர்:

சிலாங்கூர், சுங்கை பூலோ, தாமான் பெரிண்டஸ்ட்ரியான் KIB-யில் உள்ள டயர்கள் மற்றும் பேட்டரிகள் சேமித்து வைத்திருந்த சேமிப்பு கிடங்கு இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானது.

இருப்பினும் இந்த தீச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அமாட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

சம்பவம் தொடர்பில் தீயணைப்புப் படையினருக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு அவசர அழைப்பு வந்தது, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், அதிகாலை 2.07 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார். ஆனாலும் தீயினால் குறித்த சேமிப்பு கிடங்கு சுமார் 85 சதவீதம் எரிந்து நாசமானது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

 

Comments