Offline
Menu
பேராக் சுல்தான் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாமன்னர் தம்பதியர்
Published on 11/02/2024 02:40
News

பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவின் 68வது பிறந்தநாளான இன்று மாமன்னர் தம்பதியர்களான சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாழ்த்து செய்தியில்  தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சுல்தான் நஸ்ரின் பிறந்தநாளையொட்டி, நவம்பர் 9 மற்றும் நவம்பர் 16 ஆகிய தேதிகளில் பலாரோங் ஶ்ரீ, இஸ்தானா இஸ்கந்தரியா, கோல கங்சார் ஆகிய இடங்களில் இரண்டு அமர்வுகளாக நடைபெறும்  விழாவில் மொத்தம் 213 பேருக்கு அரசு பதக்கங்கள் மற்றும் கௌரவங்கள் வழங்கப்படவுள்ளன. பேராக் சுல்தான், தாப்பா சிறை, தைப்பிங் சிறை, கமுண்டிங் சீர்திருத்த மையம், பத்து காஜா அறநெறி மறுவாழ்வு மையத்தில் இருக்கும் 7,800 பேருக்கு சிறப்பு மதிய உணவினை வழங்குவார்.

 

Comments