Offline
கடந்த இரண்டு நாட்களில் நாடுமுழுவதும் 3,268 விபத்துகள் பதிவு; 39 பேர் உயிரிழப்பு
Published on 11/02/2024 02:44
News

கோலாலம்பூர்:

தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் மொத்தம் 3,268 சாலை விபத்துகள் மற்றும் 39 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் கடந்த புதன்கிழமையன்று 1,882 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் 16 உயிரிழப்புகள் பதிவாகின என்று, மத்திய போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

அதேநேரம் நேற்று 1,386 விபத்துகள் பதிவாகின. இதில் 23 விபத்துகளில் 23 மரணங்களும் பதிவாகின என்று அவர் சொன்னார்.

Comments