Offline
சிறையில் கைதிகள் இடையே மோதல் – 15 பேர் பலி
Published on 11/15/2024 01:13
News

கியூடோ,தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் இன்று அதிகாலை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார், பாதுகாப்புப்படையினர் மோதலை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈக்வடாரில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைச்சாலைகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 400க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments