Offline
பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டான்ஸ்ரீ டாக்டர் இப்ராஹிம் சாத் காலமானார்
Published on 11/16/2024 02:33
News

கோலாலம்பூர்: பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டான்ஸ்ரீ டாக்டர் இப்ராஹிம் சாத்  சுவாசக் கோளாறு காரணமாக டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) மாலை 6.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78.

அவரது மகன், டத்தோ ஜைரில் ஆயு இப்ராஹிம் 49, தொடர்பு கொண்டபோது செய்தியை உறுதிப்படுத்தினார். தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இல்லம் திரும்பிய பிறகு அவர் குணமடைந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால் நேற்று, தாமன் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள வீட்டில் இருந்தபோது, ​​மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக புகார் கூறினார். அவரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை என்று அவர் கூறினார்

Comments