Offline

LATEST NEWS

தற்கொலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானில் ஒரேநாளில் 20 பேர் பலி
Published on 11/22/2024 15:19
News

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி மீது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதியது. இதனையடுத்து அந்த காரில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டை தற்கொலைப்படையினர் வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் கொல்லப்பட்ட ஒரு தனி மோதலைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இதனிடையே மலைப்பகுதியான கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்னதாக ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டார்.

Comments