Offline
சிவகார்த்திகேயனின் `மதராஸி' 2வது லுக் போஸ்டர் வெளியீடு!
Published on 02/20/2025 10:46
Entertainment

சிவகார்த்திகேயன் தனது 23வது படமான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 24வது படத்தில் நடிக்கிறார். தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் 25வது படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்து, அனிருத் இசை அமைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, SK23 படத்தின் டைட்டில் டீசரும் முதல் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். மதராஸி எனும் தலைப்புடன் படத்தின் 2வது லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

Comments