Offline
Lights.. Camera.. Roll – மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடக்கம்
Published on 03/09/2025 12:36
Entertainment

இயக்குநர் சுந்தர்.சி. தற்போது இயக்கி தயாரிக்க உள்ள படம்மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. படத்தின் பொருட் செலவு 100 கோடி ரூபாய் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து படத்திற்கான பூஜை தொடங்குவதை முன்னிட்டு வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்2’ திரைப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் படத்தின் முதல் ஷாட் எடுத்ததை படக்குழு வீடியோவாக எடுத்து படப்பிடிப்பு தொடங்கியதை அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Comments