Offline
குட் பேட் அக்லி டைட்டிலை சொன்னதே அஜித் குமார் தான் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
By Administrator
Published on 03/21/2025 18:23
Entertainment

நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்: இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து பேசும் போது, “நான் அஜித் சாரின் தீவிர ரசிகன் என்பதால் என்னிடம் இந்தப் படம் தொடர்பாக நிறையய யோசனைகள் இருந்தன. மேலும், ‘குட் பேட் அக்லி’ என்ற தலைப்பை அஜித் குமார் தான் தெரிவித்தார். படக்குழுவும் இந்த தலைப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் குமார் பில்லா மற்றும் தீனா பட கெட்டப்களில் நடித்துள்ளார். அஜித் குமார் எப்போதும் தன்னை ஒரு பெரிய நட்சத்திரமாக நினைத்துக் கொள்ளவே மாட்டார். அவர் தன்னை ஒரு நடிகராகவே நினைக்கிறார். மேலும், படத்திற்கு ஒரு நடிகராக என்ன கொடுக்க முடியுமோ அதனை வழங்குகிறார்.

இந்தப் படத்தில் அஜித் குமார் ரெட் டிராகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அவரிடம் சொன்னதும் அவர் சரி என சம்மதம் தெரிவித்தார். அஜித் குமார் மிக கடுமையாக டயட் இருந்தார். அவரை போல் மனஉறுதி கொண்ட நபரை பார்க்கவே முடியாது. இந்தப் படத்தில் நடிக்கும் போது நேரடியாக விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருவார். வரும் வழியில் தூங்கிக் கொள்வார். வெறும் 72 நாட்களில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துக் கொடுத்தார்,” என்று தெரிவித்தார்.

Comments