Offline
எமகாதகி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
By Administrator
Published on 04/12/2025 07:00
Entertainment

தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதாநாயகியான ரூபா மர்மமான முறையில் இறக்கிறார். இறந்த உடலில் உயிர் பெற்று தான் இறந்ததற்கான விஷயத்தை கூறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜாதி, காதல், ஆணவப்படுகொலை என அனைத்தையும் பற்றி இப்படம் பேசியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Comments