தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்கும் அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.