Offline
பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; பயணிகள் 8 பேர் பலி
By Administrator
Published on 04/15/2025 07:00
News

அபுஜா அமைந்துள்ள நைஜீரியாவில் ஐ.எஸ்., போகோ ஹராம், பண்டிட்ஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் பண்டிட்ஸ் குழுவை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்நிலையில், போர்னோ மாகாணம் டம்புரா–மைடுகுரி நெடுஞ்சாலையில் இன்று பயணித்த பஸ்சை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்து, 12 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

Comments