காங்கோவில் அரசும், ருவாண்டா ஆதரவு பெற்ற எம்.23 கிளர்ச்சியாளர்களும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் 70 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். சமீபத்தில், கிழக்கு காங்கோவின் கோம பகுதியில் மோதல் வெடித்து, 52 பேர் கொல்லப்பட்டனர். கைஷீரோ மருத்துவமனையிலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஒருவர் உயிரிழந்தார்.nஉள்துறை அமைச்சகம் எம்.23 குழுவை குற்றம் சாட்டினாலும், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காங்கோ படைகள் மீது குற்றஞ்சுமத்தியுள்ளார். மோதலின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதற்கான தகவல் தெளிவில்லை. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கத்தார் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் சமீபத்திய மோதலில் மட்டும் 3,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.