இஸ்தான்புல் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிப்கள் போன்ற மின்னணு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார். “சீனாவை போன்ற நாடுகள் நம்மை தவறாக நடத்துகிறது, அதனால் யாரும் வரி விதிப்பிலிருந்து தப்ப முடியாது,” என ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க சுங்கத்துறை சில மின்னணுப் பொருட்கள் வரிவிலக்குக்குள் வரலாம் என அறிவித்திருந்த நிலையில், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், இது நிரந்தர விலக்கு அல்ல என்றும், எதிர்காலத்தில் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்றும் தெளிவுபடுத்தினார். டிரம்ப், அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவித்து, சீனாவுக்கு பொருளாதார இழுத்தடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.