ஜார்ஜ் டவுன்:
நள்ளிரவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பினாங்கு நகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஜாலான் பி. ராம்லீ மற்றும் கம்போங் மஸ்ஜிட் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் அங்குள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மலேசிய சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 16) அதிகாலை 1.40 மணியளவில் நீர் மட்டம் உயர்ந்து, வீடுகளுக்குள் நுழைவதைக் கண்டனர் என்றும், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உடமைகளும் பாதுகாப்புக்காக உயரமான இடங்களுக்கு மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகிறது.இருப்பினும் அதிகாலை 3 மணியளவில், மழை நின்றுவிட்டது, அதேநேரம் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. ஆனால், காலை 8.15 மணியளவில், மீண்டும் மழை தொடங்கியது.ஆனால் இதுவரை எந்த துயர் துடைப்பு மையங்களும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.