பெட்டாலிங் ஜெயாவிலுள்ள 1 உத்தாமா ஷாப்பிங் சென்டரின் வெளிப்புற கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற சொங்கரான் கொண்டாட்டத்தின் போது, அங்கிருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை குறித்துக் காவல்துறையினர் ஐவரைக் கைது செய்துள்ளனர்.சண்டை தொடர்பான காணொலி தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து, 20 வயது முதல் 30 வயது வரையிலான ஐந்து நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருல்னிசாம் ஜாஃபர் கூறினார்.
அக்காணொலியில் சொங்கரான் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டையின் விளைவாக ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதையும் மேலே பிளாஸ்டிக் நாற்காலிகள் வீசுவதையும் காண முடிந்தது.