ஷா ஆலம்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 23) அதிகாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, சிலாங்கூரின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை செயல்பாட்டு இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, 86 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், யாரும் அங்கிருந்து நிவாரண மையங்கலுக்கு வெளியேற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அவர் சொன்னார்.