சென்னை,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் பிரியா வாரியருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், அர்ஜுன் தாஸுடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் நடனம் ஆடியது ரசிகர்கள் மட்டுமில்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் குறித்து நடிகை பிரியா வாரியர் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,’அர்ஜுன் தாஸ் ரொம்ப இனிமையான நபர். அவரோட குரலுக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். மிகவும் அர்ப்பணிப்போடு ஒவ்வொருநாளும் படப்பிடிப்பில் தன்னுடைய பெஸ்டை கொடுத்தார். அது மிகவும் சிறந்த ஒன்று’ என்றார்.