Offline
ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசி படம் என சொல்றாங்க... லதா ரஜினியின் பதில் கிளப்பும் பரபரப்பு!
By Administrator
Published on 05/04/2025 08:00
Entertainment

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி ஓய்வு எடுக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால், லதா ரஜினிகாந்த் ஜெயிலர் 2 க்குப் பிறகும் ரஜினி தொடர்ந்து நடிப்பார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments