தமிழ் சினிமாவில் 22 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக வசூலை உறுதியாக்கி வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரைபிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ.10-12 கோடி வரை சம்பளம் பெறும் த்ரிஷா, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் விலை உயர்ந்த வீடுகளும் கொண்டிருக்கிறார். இந்த விவரம் அதிகாரப்பூர்வமல்ல என்றும் குறிப்பிடப்படுகிறது.