நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் ஆகிய இருவருக்கும் அரசியல் பார்வை, நாட்டின் பிரச்சினைகள் குறித்த தெளிவான புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் பேசும் வசனங்கள் கேட்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இவ்விரு நடிகர்களும் திரையுலகம் மூலம் பெற்ற புகழை வைத்துக்கொண்டு, அரசியல் களத்துக்கு வந்துள்ளனர்.
“பவன் கல்யாண் பத்து ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தார். விஜய் இப்போதுதான் வருகிறார். நான் இவர்களை அறிந்தவரை, அரசியலைப் பற்றித் தீவிரமாக பேசியதில்லை.
“பவன் கட்சி ஆரம்பித்த பத்து ஆண்டுகளில், மக்கள் பிரச்சினைகள் குறித்த தெளிவான பார்வையோ புரிதலோ அவரிடம் வெளிப்படவில்லை. அதே நிலைதான் விஜய்யிடமும் காணப்படுகிறது,” என்று பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலுக்கு மாற்றாக மக்கள் இவர்களை ஆதரித்தாலும், இருவரும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.