Offline
44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
By Administrator
Published on 05/14/2025 09:00
Entertainment

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த Jism 2 என்கிற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் கலக்கி வந்தார். கிளாமர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

பின் Oh My Ghost படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது ரங்கீலா படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார். ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகை சன்னி லியோனுக்கு 44வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 98 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுவே இவருடைய சொத்து மதிப்பு விவரம் ஆகும். ஆனால், இவை அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Comments