பல்வேறு மொழி சினிமாக்களில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களின் பிள்ளைகள், பெரும்பாலும் திரைப்படத்தில் நடிக்கவே முன்வருவதை நாம் அடிக்கடி காண்கிறோம். ஆனால் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தம்பதிகள் இருவரும், தங்களுடைய மகளை சினிமா துறையில் அனுப்பாமல், மருத்துவப் படிப்பை தேர்வு செய்ய வைத்திருக்கின்றனர்.இவர் தான் தமிழ் திரைப்படங்களில் ‘அம்மா’ கதாபாத்திரங்களில் நன்கு அறியப்பட்ட நடிகை சரண்யா பொன்வண்ணனின் மகள். தற்போது அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். அவருடைய பட்டமளிப்பு நிகழ்வில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.