அதிக லாபம் தரும் போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, 67 வயது நபர் ஒருவர் 625,250 ரிங்கிட்டை இழந்தார். மார்சில் தொடங்கிய இந்த மோசடியில், வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அவரை முதலீட்டு குழுவில் சேர்த்தனர். பாதிக்கப்பட்டவர் 16 முறைகள் வைத்து பணம் செலுத்திய பின்னும், லாபம் எடுக்க முடியாததால் மோசடி என உணர்ந்து மே 25 அன்று போலீசில் புகார் செய்தார். பொதுமக்கள் இப்படியான மோசடிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.