குவாந்தான், ஜாலான் லிப்பிஸ்-பென்டாவின் 8ஆவது கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் டெமாக் எஸ்எஸ் மோட்டார் சைக்கிள், யமஹா ஒய் 15 மற்றும் டிரெய்லர் லாரி ஆகியவை மோதியதாக லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில், லிபிஸிலிருந்து ரௌப் செல்லும் டெமாஸ் எஸ்எஸ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீடு திரும்பிக் கொண்டிருந்ததும், செராஸிலிருந்து யமஹா Y15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கோலா லிப்பிஸின் கம்போங் பாபோங்கிற்குச் சென்று கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அதே நேரன் டிரெய்லர் லோரி கோல கிராய் நகரிலிருந்து போர்ட் கிளாங்கிற்கு ரப்பர் சுமையை ஏற்றிக்கொண்டு பயணித்த 35 வயது நபர் ஓட்டிச் சென்றார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் சாலையின் நடுவில் நேருக்கு நேர் மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். மோதலைத் தொடர்ந்து, டெமாக் எஸ்எஸ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் வீசப்பட்டதாக அவர் கூறினார். விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்ட சைஃபுல் ஹஸ்ரின் சாலேஹுடின், 43, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி பாதிக்கப்பட்டவரை மோதவிடாமல் தவிர்க்க முடிந்தாலும் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளில் மோதுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், யமஹா Y15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கால் மற்றும் வலது தொடையில் உடைந்ததாக இஸ்மாயில் கூறினார். இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (RTA) பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவத்திற்கு சாட்சிகளாக இருந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.