Offline
இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாடலாசிரியர் சினேகன், கன்னிகா தம்பதி
By Administrator
Published on 05/28/2025 09:00
Entertainment

பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என்று பெயர் சூட்டினார். அதன் பிறகு தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டாலும், அவர்களின் முகத்தை காட்டாத சினேகன், கன்னிகா தம்பதியினர், தற்போது எக்ஸ் பக்கத்தில் தங்கள் இரண்டு குழந்தைகளின் முகத்தை காண்பித்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதோடு, சினேகன் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும் திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும். நன்றி என்றும் நட்புடன் சினேகன்’ என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.

Comments