தாமன் புகிட் கெமுனிங்கில் பலமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 180 வீடுகள் நீரில் மூழ்கின. ஒரு மீட்டருக்கு மேல் நீர் உயரம் பதிவானதால், 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் இடம் மாற்றப்பட்டனர். முதியவர்கள் முன்னுரிமை அடிப்படையில் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நீர் வெளியேற வேண்டிய பெரிய பம்ப் செயலிழந்ததை அதிகாரிகள் கண்டறிந்து, நீர்ப்பாசனத் துறைக்கு அறிவித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் மழை தொடரும் நிலையை அச்சத்துடன் எதிர்நோக்குகின்றனர்.