பிரதமர் அன்வார் இப்ராகிம், இனி அரசு நிகழ்வுகளில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு மந்திரித்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர், உள்ளூர் விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க இது உதவும் என்றும், உள்ளூர் பொருட்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அண்மைக் காலமாக இன்னும் சிலர் இறக்குமதி உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.