பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அதை விற்கும் முயற்சியை அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2023 நவம்பரில் 7 ஆயிரம் ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே விற்பனை முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது 4 உள்ளூர் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன என தனியார்மயமாக்கல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வேலை அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.