கோலாலம்பூரில் நடைபெறும் SportExcel-KLGCC சர்வதேச ஜூனியர் கால்ஃப் சாம்பியன்ஷிப் இன்று தொடங்கியது. ஜூலை 16 முதல் 19 வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 108 வீரர்-வீராங்கனைகள் பல்வேறு வயது பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நார்வே, தாய்லாந்து, தென் கொரியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த ஜூனியர் திறமைகளை ஒன்று சேர்க்கும் இந்த போட்டி, 2025 ஏசியன் டெவலப்மெண்ட் டூர், சிங்கப்பூர் லேடீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் நெக்ஸ்ட் ஜென் வேர்ல்ட் ஃபைனல்ஸ் உள்ளிட்ட முக்கிய சுற்றுகளுக்கான தகுதிச்சீட்டுகளையும் வழங்குகிறது.
மலேசிய கால்ஃப் சங்கத்துடன் இணைந்து சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது என ஒழுங்கமைப்பு தலைவர் சிவானந்தன் தெரிவித்தார். மேலும் அதிகம் திறமையான வீரர்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல நிதியுதவி அவசியம் என்றும் MGA நிர்வாகி ஃபாவ்ஸி மெஸ்ரான் கூறினார்.
உலக தர அளவிலான ஜூனியர்களை உருவாக்கும் நோக்குடன், இப்போட்டி சர்வதேச நட்புறவை வளர்க்கவும் அமைந்துள்ளது.