பீஜிங்கில் நடந்த உச்சிமாநாட்டில், சீன தலைவர் சீ ஜின்பிங், தற்போது நிலவும் சர்வதேச குழப்பங்களுக்கு மத்தியில், சீனா-ஐரோப்பா உறவு நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் மற்றும் கவுன்சில் தலைவர் ஆண்டோனியோ கோஸ்டா, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கிய திருப்புமுனையில் இருக்கின்றன எனக் கூறி, உண்மையான தீர்வுகள் தேவை என்பதை சுட்டிக்காட்டினர்.
இருவரும் வர்த்தக சிக்கல்கள், சீனாவின் மலிவான பொருட்கள், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகிய விடயங்களில் கவலை தெரிவித்து, ஐரோப்பாவின் பல பிரச்சனைகளுக்கு சீனா காரணமல்ல என சீ பதிலளித்தார்.
ஐரோப்பா, சீனாவுடன் பரஸ்பர நன்மை அடையும் முறையில் சந்தை அணுகல், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறைப்பு போன்ற முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறது.
உலக வர்த்தகத்தில் சமநிலையை நிலைநாட்ட ஒத்துழைப்பு அவசியம் என சீன பிரதமர் லி கியாங் தெரிவித்தார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனாவின் நெருங்கிய நெருக்கம், மேலும் ஒரு முக்கிய பதற்றக் காரணமாகும் எனவும், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போரை முடிக்க உதவ வேண்டும் எனவும் கோஸ்டா தெரிவித்தார்.