சீனத்தின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதன் புறநகரங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மியூன் மற்றும் யான்சிங் மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதிக மழை பெய்த பகுதிகள் மலைகள் சூழ்ந்தவை என்பதால் சேதம் பெரிதாகியுள்ளது.இதுவரை 80,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங் வடக்கு மாவட்டங்களில் மட்டும் 543 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது சமீபத்திய ஆண்டுகளில் மிக அதிகம்.தீவிர மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங், உரிய சிகிச்சை மற்றும் சேத நிர்வாகத்திற்கு அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மழை மற்றும் வெள்ளத்துக்கான உயர்மட்ட எச்சரிக்கை அமலில் உள்ளது. பொதுமக்கள் வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.