கோலாலம்பூர்,
KLIA விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் எயரோடிரைன் சேவையில் ஏற்பட்ட இடையூறு , இயந்திரக் கோளாறு காரணமாக அல்ல, ஒரு மென்பொருளில் ஏற்பட்ட பிழை (software bug) காரணமாக ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
“இது ஒரு breakdown அல்ல. சாதாரண தொழில்நுட்ப பிழை தான். இவ்வாறு இடைக்கால கோளாறுகள் எந்த முறைமையிலும் நேரிடக்கூடியவை,” என்றும் அந்தப் பிழை 15 நிமிடங்களில் சரிசெய்யப்பட்டது என்றும் தெரிவித்தார் அவர்.
KLIA எயரோடிரைன் சேவையில் மாதத்திற்கு 1.5 மில்லியன் பயணிகள் மற்றும் நாளுக்கு நூற்றுக்கணக்கான பயணங்கள் மேற்கொள்வதாக அவர் கூறினார்.
அதேநேரத்தில், சேவையின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பணி நிலைக்கு மலேசிய விமான நிலையங்கள் நிறுவனமான MAHB தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.