Offline
Menu
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
By Administrator
Published on 11/04/2025 15:53
News

வாஷிங்டன்,அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 1975-ம் ஆண்டு கூட்டாட்சி துணை ஊட்டச்சத்து உதவி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி உணவு வாங்குவதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சுமார் 4 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்த திட்டத்துக்கான மானியத்தை நிறுத்துவதாக அமெரிக்க வேளாண் துறை சமீபத்தில் அறிவித்தது. இதனால் ஏழை மக்கள் பலரும் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே இலவச உணவுகள் வழங்கப்படுகின்றன. அதனை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்லும் நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

Comments