கோலாலம்பூர்:
ஜோகூர், சிகாமாட்டில் உள்ள ஜெமெந்தாவில் ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், இன்று திங்கள்கிழமை (நவம்பர் 3) இரவு 7.55 மணிக்கு ஏற்பட்டது, நிலநடுக்கத்தின் மையப்பகுதி 2.5° வடக்கு மற்றும் 102.8° கிழக்கில், சிகாமாட்டிலிருந்து மேற்கே சுமார் 3 கிமீ தொலைவில், 10 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது என்று, மெட்மலேசியா) இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.