ராய்ப்பூர்,சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் வந்த மெமு ரெயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மெமு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 20 பயணிகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.